Connect with us

Cinema News

செல்ஃபி, சால்வை!.. சாமானியர்கள்ன்னா இளக்காரமா சிவகுமார்?.. நறுக்கென கேள்வி எழுப்பிய பிரபலம்!..

தனது பல ஆண்டுகால நண்பர் சால்வை அணிவிக்க வந்த போது அவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்துவது போல சால்வையை பிடுங்கி கோபத்துடன் சிவகுமார் தூக்கி எறிந்தது பெரும் பஞ்சாயத்தை கூட்டியது.

அந்த நபர் நெருங்கிய நண்பராக இருந்தாலும், பொதுவெளியில் சிவகுமார் செய்தது தவறு கிடையாது என பிரச்சனை கிளம்பிய நிலையில், அந்த நண்பருடன் இணைந்து வீடியோ வெளியிட்டு மன்னிப்பும் கேட்டிருந்தார் சிவகுமார்.

இதையும் படிங்க: வேட்டையன் வரார் வழிவிடுங்கோ!.. அந்த கெட்டப்பில் வெளியான ரஜினிகாந்த் வீடியோ.. செம வைரல்!..

இதே போல செல்ஃபி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்ட போது அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து வீடியோ போட்டிருக்கலாமே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சாமானியர்கள் என்றால் சிவகுமாருக்கு இளக்காரம் போல என ப்ளூ சட்டை மாறன் புதிய ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார்.

சூர்யா மற்றும் கார்த்தியின் அப்பாவான சிவகுமார் பலருக்கு அறிவுரை வழங்கி வரும் நல்ல மரியாதையான இடத்தில் இருக்கும் போது கோபம் தான் சத்ரு என்பதை கூட அவர் கற்றுக்கொள்ளவில்லையே என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறனுக்கு விடிவு காலம் பொறந்துடுச்சு!.. ஒருவழியா ஓடிடியில் ரிலீஸான ஆன்டி இண்டியன்!

”அந்த செல்போன் தம்பியும், உங்கள் நண்பரும் சாமான்யர்கள். அதனால்தான் இப்படி தட்டி விடுகிறீர்கள். இதையே ஒரு அரசியல்வாதி, தொழிலதிபர் அல்லது பிரபல நடிகர் மற்றும் அவரது குடும்பத்தார் செய்திருந்தால் தட்டி விட்டிருப்பீர்களா?  ஆக.. பணக்காரன், பாமரன் எனும் பேதம் பார்ப்பதே இதற்கு முக்கிய காரணம்.” என ப்ளூ சட்டை மாறன் சிவகுமார் தான் இப்போதைக்கு கிடைத்த ஒரே கன்டென்ட் என ரவுண்டு கட்டத் தொடங்கி விட்டார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top