என்ன முக்கினாலும் ரூ.1,000 கோடிக்கு வாய்ப்பில்லை ராசா: புளு சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே

மிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம், அந்தப் படம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்ற எதிர்பார்ப்
 
blue sattai maran

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம், அந்தப் படம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில்  எழுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் இதுவரை அந்த இலக்கை எந்த தமிழ்ப் படமும் எட்டவில்லை என்கிற விமர்சனம் மீண்டும் எழுந்துள்ளது.

சூர்யாவின் கங்குவா  திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் அதன் வசூல் ரூ.1,000 கோடியை எட்டும் என்ற எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் படம் வெளியான பிறகு முதலுக்கே மோசமானது அப்படம்.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின்  ஜெயிலர் 2  திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனைகளைப் படைத்து வருகிறது. படம் வெளியானது முதலே தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால்  ஜெயிலர் 2  ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்று பலரும்  நினைக்கின்றனர்.  

 

blue sattai marran

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ,  தமிழில் எந்த பெரிய நடிகரின் படம் வந்தாலும் ரூ.1,000 கோடி வசூல் செய்யும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். கங்குவா உட்பட இதற்கு முன்பு அப்படி கூறப்பட்ட எந்தப் படமும் அந்த இலக்கை எட்டவில்லை. ஜெயிலர் 2 என்ன முக்கினாலும் ரூ.1,000 கோடிக்கு வாய்ப்பில்லை ராசா  என்று பதிவிட்டுள்ளார்.

 இந்திய சினிமாவில் ரூ.1,000 கோடி வசூல் என்ற மைல்கல்லை சில திரைப்படங்கள் கடந்துள்ள நிலையில்,  தமிழ் சினிமாவில் இருந்து முதல் ரூ.1,000 கோடி திரைப்படம் எது என்ற எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் தொடர்கிறது. 

From Around the web