நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நிலையிலும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை ஓயவே இல்லை. வெற்றி பெறுகிறோமோ, தோல்வி அடைகிறோமோ தில்லாக இந்த வயதிலேயே சினிமாவை தூக்கிப் போட்டு விட்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறேன் என அறிவித்து இருப்பதை பலரும் பாராட்டி வரும் அதே நேரத்தில், நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்தும் வறுத்தெடுத்தும் ஏகப்பட்ட பதிவுகள் சமூக வலைதளங்களை நிரப்பி வருகின்றன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு இதுபோன்ற ரஜினிகாந்த்தும் அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். அவர் எப்போது கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போது இருந்து கொண்டே இருக்கும். முத்து படத்தில் ”கட்சி எல்லாம் இப்போ நமக்கு எதற்கு.. காலத்தின் கையில் முடிவு இருக்கு“ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும்.
இதையும் படிங்க: தொட்டால் பூ மலருமா?.. தொடப்பக்கட்டை தான் பறக்கும்.. என்ன இழவுடா இது.. வடக்குப்பட்டி ராமசாமி முடியல!
படையப்பா படத்தில் ”ஓஹோ ஒஹோ கிக்கு ஏறுதே” பாடல் காட்சிக்கு முன்னதாக உங்களுக்குத்தான் எல்லாத்திலும் வெற்றியா இருக்கு அரசியல் பக்கமும் வர வேண்டியதுதானே என்கிற வசனத்தை வைத்திருப்பார்கள்.
பாபா படத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. சன்னியாசியாக போகப் போகிறேனா அல்லது சிஎம் நாற்காலியில் உட்காரப் போகிறேனா என்கிற ரேஞ்சுக்கு படத்தின் கிளைமாக்ஸை முடித்திருப்பார்கள்.
இதையும் படிங்க: அட்லீ கனவு அவ்ளோ தானா?.. விஜய், ஷாருக்கான் படத்துக்கு மூடு விழா போட்ட விஜய்.. எல்சியூவுக்கும் ஆப்பு?
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி, காலா படங்களுமே அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகள் ஆகவே இருந்தன. ஆனால் அதன் பின்னர் திடீரென இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை என்றார். கடைசியாக இப்பவும் இல்லை எப்பவும் இல்லை என தனது அரசியல் டிராமாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.எஸ். பாஸ்கரின் புகைப்படத்தை போட்டு ரஜினி ரசிகர்கள் நிலைமை என கலாய்த்து உள்ளார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…