மகேஷ் பாபுவை நடிக்க வைக்க படாதபாடு படும் ராஜமெளலி!.. விஜய் ஆண்டனியை கோர்த்து விட்ட புளூ சட்டை மாறன்!

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள பிரம்மாண்ட படம் விரைவில் தொடங்க உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களை பேன் இந்தியா ஹீரோக்களாக ராஜமௌலி மாற்றி வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஷங்கர் செய்ய தவறவிட்ட பல்வேறு விஷயங்களை டோலிவுட்டில் ராஜமௌலி துணிச்சலுடன் செய்து காட்டி சாதனைப் படைத்து வருகிறார். ராம்சரண், பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் என பல நடிகர்களை உருவாக்கிய ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை பேன் வேர்ல்டு நடிகராக மாற்ற முயற்சிகளை செய்து வருகிறார்.500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள மகேஷ்பாபுவின் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, மகேஷ் பாபுவுக்கு நடிகர் நாசரை வைத்து நடிப்புப் பயிற்சியையும் வசன உச்சரிப்பு பயிற்சியியையும் கொடுக்க ராஜமௌலி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த செய்தியை அறிந்த புளூ சட்டை மாறன் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில், ஒரு வழியாக.. மகேஷ்பாபுவை நடிக்க வைக்கும் இமாலய முயற்சி ஆரம்பம். விஜய் ஆண்டனிக்கும் நடிப்பு பயிற்சி தந்து தமிழ் ரசிகர்களை காப்பாற்றுவாரா நாசர் சார்? எனக் கேட்டு கலாய்த்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்திற்கு கடுமையான விமர்சனங்களை கொடுத்த புளூ சட்டை மாறனுக்கு எதிராக விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை போட்ட நிலையில், இருவருக்கும் இடையே மோதல் முற்றிக் கொண்டது.

தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு நடிக்கத் தெரியவில்லை என புளூ சட்டை மாறன் தனது வன்மத்தை கக்கி வருகிறார். அதேபோல மகேஷ் பாபுவுக்கும் நடிக்கத் தெரியவில்லை எனக் கூறி தெலுங்கு ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகி உள்ளார்.

Related Articles

Next Story