Categories: Cinema News latest news

கடைசி 40 நிமிஷம் சூப்பர்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு தனுஷ் கொடுத்த விமர்சனம்.. ப்ளூ சட்டை கலாய்!..

கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்துக்கு பிறகு எடுத்த படங்கள் எல்லாம் சரியாக போகாத நிலையில், மீண்டும் தனது சூப்பர் ஹிட் படமான ஜிகர்தாண்டாவை நம்பி அதே போல ஒரு படத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என உருவாக்கி உள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் கார்த்தியின் ஜப்பான் உள்ளிட்ட படங்களை தான் மக்கள் பார்க்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

இதையும் படிங்க: இயக்குனர் பண்ண ஒரே தப்பு! விக்ரம் கெரியரே போச்சு – சொன்னத கேட்டிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?

இந்த இரு படங்களில் எந்த படம் தீபாவளி வின்னராக மாறும் என்கிற தேடல் ஒரு பக்கம் இருந்தாலும், இரண்டு படங்களுமே விடுமுறை நாட்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்றே தெரிகிறது.

இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தையும் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பையும் ரொம்பவே பாராட்டி உள்ளார். மேலும், சந்தோஷ் நாராயணனின் இசையையும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடைசி 40 நிமிட படம் வேறலெவல் என தனுஷ் பதிவிட்டுள்ள நிலையில், காலையிலேயே அதை பார்த்து விட்ட ப்ளூ சட்டை மாறன் “அப்போ மீதிப்படம்” என தனது ஸ்டைலில் கலாய்க்க ஆரம்பித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த ஜாக்கெட்டு எங்க கிடைக்கும்?!. மாளவிகா மோகனின் அழகில் மயங்கும் புள்ளிங்கோ!..

இப்போதெல்லாம் இயக்குநர்கள் முழு படத்தை நிறைவாக கொடுப்பதில்லை. முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க, கடைசி 40 நிமிஷம் சூப்பராக இருக்கும் என்றே விமர்சனங்கள் வருவது தான் படத்திற்கே மைனஸ் ஆக முடிகிறது. மொத்த படமும் சூப்பர் என சொல்லும் அளவுக்கு படங்கள் தரமாக உருவாகாதது ரசிகர்களை தான் கடுப்பாக்கி வருகிறது.

Saranya M
Published by
Saranya M