Categories: Cinema News latest news

யோகா, தியானம்லாம் பண்ணியும் கோபம் குறையலையேப்பா! சிவகுமாரை பங்கமா கலாய்த்த பிரபலம்!..

காரைக்குடியில் கரு. பழனியப்பன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்ற நடிகர் சிவகுமார் தனக்கு சால்வை அணிவிக்க வந்த முதியவரை பார்த்து கடுப்பாகி அவர் கையில் வைத்திருந்த சால்வையை தூக்கி வீசி எறிந்த வீடியோ வைரலான நிலையில், சிவகுமாருக்கு ஏன் இவ்வளவு கோபம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்களுடன் நடித்து வந்த சிவகுமார் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு சொற்பொழிவு மற்றும் அறிவுரைகள் வழங்குவது என தனது துறையை மாற்றிக் கொண்டார்.

இதையும் படிங்க: அய்யய்யோ ஆளவிடுங்க!.. எனக்கும் அந்த தயாரிப்பாளருக்கும் சம்மந்தமே இல்லை!.. அலறியடித்த அமீர்!

தனது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியை சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக மாற்றிய நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

ஏற்கனவே செல்ஃபி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை கோபத்தில் சிவகுமார் தூக்கி எறிந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் இவரை கிண்டல் செய்து வந்தனர்.

இதையும் படிங்க: கோலிவுட்ல ஒரு கேம் ஆஃப் த்ரோன்ஸா?.. விஷுவல்ஸ் மிரட்டுதே!.. சிம்பு புது வீடியோ பார்த்தீங்களா? ..

இந்நிலையில், யோகா தியானம் எல்லாம் செய்யும் சிவகுமார் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையே என ப்ளூ சட்டை மாறன் தற்போது ஒரு ட்வீட் போட்டு அவரை பங்கமாக கலாய்த்துள்ளார்.

“யோகா கற்றுக்கொண்டால் மனம் அமைதியாகும். கோபம் வராது.” என பதிவிட்டு சிவகுமார் யோகா செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வம்பிழுத்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் சூர்யா ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

 

Saranya M
Published by
Saranya M