Categories: Cinema News latest news

தமிழ் சினிமாவை காப்பாத்த சுந்தர். சி சொன்ன ஐடியா!.. அரண்மனை 4வது பார்க்குற மாதிரி இருக்குமா சார்!..

பெரிய இயக்குநர்கள் சிறிய நடிகர்களை வைத்து படம் பண்ண வேண்டும். சிறிய இயக்குநர்களுக்கு பெரிய நடிகர்கள் பட வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். இது நடந்தால் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும் என சுந்தர். சி தனக்கு தோன்றிய கருத்தை கூறியுள்ளார்.

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அரண்மனை 4 படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்து வரும் சுந்தர். சி தமன்னா மற்றும் ராஷி கன்னாவின் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அப்போ அது மலையாள பிட்டு பட டைட்டிலா?.. அஜித்துக்குப் போய் இப்படி பண்ணிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!..

மேலும், கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோரும் சுந்தர். சி உடன் இந்த படத்தில் நடித்து வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சுந்தர். சியின் தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்கிற உன்னத கருத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன், ”நல்ல கன்டன்ட் அவசியம் சார். நீங்க இன்னும் அரண்மனையை புடிச்சிதான் தொங்கிட்டு இருக்கீங்க. பார்ட் 4 தான் கடைசியா இல்லன்னா.. 5, 6 ன்னு நிக்காம போகுமா?” என்று கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: குரு சிஷ்யன் படத்துக்காக இதை செய்யலாமே? ஆசையாக கேட்ட ஏவிஎம்… யோசிக்காமல் செய்த ரஜினிகாந்த்!…

ஆரம்பத்தில் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் பண்ண நீங்க ஏன் இப்போ அரண்மனை படத்தை புடிச்சு தொங்குறீங்க என்றும் நல்ல படங்களை பண்ணினால் தான் வெற்றிக் கிடைக்கும் என்றும் ரசிகர்களும் சுந்தர். சிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M