Connect with us

Cinema News

ப்ளூ சட்டை மாறனுக்கு குசும்பு ஜாஸ்திதான்!.. விஜய், கமல் போட்டோவை போட்டு அப்படியொரு கலாய் கேப்ஷன்?..

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் அமீர்கான், சூர்யா, லோகேஷ் கனகராஜ், ஜெயம் ரவி, விக்னேஷ் சிவன், குஷ்பு, ராதிகா, பார்த்திபன் என திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு கமலை வாழ்த்தினர்.

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் கிளைமேக்ஸில் கமல் கலந்து கொண்ட நிலையில், வெற்றி விழாவில் பங்கேற்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், அதுவும் ஏமாற்றமாகவே முடிந்தது.

இதையும் படிங்க: கும்தாவா இருக்கியே ஷிவானி!.. அழகு சும்மா ஆள தூக்குதே!.. டைட் டிசர்ட்டில் வெயிட்டு காட்டுறீயே!..

இந்நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்து ட்வீட்டாவது விஜய் போடுவார் என்று பார்த்தால் அதையும் அவர் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி வைத்திருந்தும் செய்யவில்லை.

அவருக்கு பதிலாக அவரது அட்மின் ஜெகதீஷ் தான் லியோ படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு விஜய் சார்பாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: ரஜினி முதல் விஜய் வரை திருந்தவே மாட்டாங்க!.. இனிமேல் இதுதான் தலையெழுத்து.. ப்ளூ சட்டை மாறன் செம கிழி!..

கேரளா முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல கட்சி தலைவர்களும் மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் என பல மாநில நடிகர்களும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், விஜய் ஏன் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்கிற கேள்வி எழுந்து விடாமல் ஜெகதீஷ் பார்த்துக் கொண்டார்.

தற்போது அவர் ஷேர் செய்த கமல் மற்றும் விஜய் இருக்கும் போட்டோவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் ”நாளைய முதல்வர்கள்” என கேப்ஷன் போட்டு கலாய்த்துள்ளார்.

மேலும், கமல்ஹாசனின் ஹேர்ஸ்டைலையும் நடிகர் விஜய்யின் ஹேர்ஸ்டைலையும் அந்த போட்டோவில் பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் நடிகர் விஜய்யை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top