யார் இந்த ப்ளூ சட்டை?.. விஜய் நண்பர்னா திருவண்ணாமலையில் சலுகையா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ஸ்ரீமன் தரிசனம் செய்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், விஐபி தரிசனம் குறித்து கேள்வி எழுப்பியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை தீப நாளில் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில், நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகிறதா என அவர் விமர்சித்துள்ளார்.
யார் இந்த ப்ளூ சட்டை? தமிழக அரசு அதிகாரியா அல்லது கோவில் உயர் நிர்வாகியா? திருவண்ணாமலை கோவிலில் சாமான்யர்கள் வழிபட பெரும்பாடு பட வேண்டியுள்ளது. சினிமா நடிகர் ஸ்ரீமன் எனும் நபர் விஜய்யின் நண்பர் என்பதால் இந்த VIP தரிசனமா? பதில் இருக்கா ரமேஷ்? https://t.co/E8o7ME4qm1
— Blue Sattai Maran (@tamiltalkies) November 24, 2026
ஸ்ரீமன் கோவிலில் தரிசனம் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், யார் இந்த ப்ளூ சட்டை? தமிழக அரசு அதிகாரியா அல்லது கோவில் உயர் நிர்வாகியா? திருவண்ணாமலை கோவிலில் சாமான்யர்கள் வழிபட பெரும்பாடு பட வேண்டியுள்ளது. சினிமா நடிகர் ஸ்ரீமன் எனும் நபர் விஜய்யின் நண்பர் என்பதால் இந்த VIP தரிசனமா? பதில் இருக்கா ரமேஷ்?” என பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், தரிசன ஏற்பாடுகள், அனுமதிச் சீட்டுகள் மற்றும் விஐபி வசதிகள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
