
Cinema News
இவ்வளோ முட்டுக்கொடுத்தும் விஜய் இடத்தை ரஜினி பிடிக்க முடியலையே.. செஞ்சி விட்ட பிரபலம்..
தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நடிகர்களாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் விஜய். 75 வயதை தாண்டியும் இன்றும் நம்பர் ஒன் இடத்தில் இருந்து, தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்து வருகிறார். இவர் வயதில் உள்ள பிற நடிகர்கள் சில பேர் ரிட்டையர்டு ஆகிவிட்டார்கள். சில பேர் ஹீரோ ஹீரோயின்களுக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் வில்லன், குணச்சித்திரம் இப்படி சென்று கொண்டு இருக்கையில் ரஜினிக்கான மாஸ் இன்னும் குறையாமல் படத்திற்கு படம் அதிகமாகி கொண்டு செல்கிறது.
ஜெயிலர் படம் இவருக்கு எதிர் பார்த்த வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவில் நான் ஒரு வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்து விட்டார். அதன் பிறகு வெளியான வேட்டையின் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ”கூலி” திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது வரை இந்த திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும் இதற்கான நெகட்டிவ் விமர்சனங்கள் படம் வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை வந்து கொண்டு தான் இருக்கிறது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, இது லோகேஷ் படமே இல்லை, ரஜினி எப்படி இந்த கதையை ஒப்புக் கொண்டார்? என பல கேள்விகள் விமர்சனங்கள் கூலி படத்தின் மீது வைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் விஜய் ரசிகர்கள் தான் என்று ஒரு புறம் கூவ தொடங்கி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தான் உச்சத்தில் இருக்கும் போது சினிமா வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு ”தமிழ வெற்றிக் கழகம்” என்ற கட்சி ஆரம்பித்து அரசியலில் களமிறங்கியுள்ளார் விஜய். தற்போது தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக விஜயின் கட்சி இருக்கிறது. விஜய் அரசியல் பக்கம் சென்றாலும் மற்றொருபுறம் ரஜினி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கொண்டு இருக்கிறார். இன்று வரும் பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்கள் அனைத்தும் ஃபேன் இந்தியா படங்களாகவே எடுக்கப்படுகிறது.

விஜய்க்கு கடைசியாக லியோ படம் ஃபேன் இந்தியா தரத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. ஆனால் ரஜினிக்கு எடுக்கிற எல்லா படமும் ஃபேன் இந்தியா தரத்தில்தான் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வயதில் அவரை ஜெயிக்க வைக்க இந்தியா முழுவதிலும் இருந்து ஆர்டிஸ்ட்டுகளை வரவழைக்க வேண்டியதா இருக்கிறது என்று கலாய்த்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன் அவர் போட்ட பதிவில் ‘விஜயை மிகைப்படுத்தி காண்பிக்க சஞ்சய் தத் என ஒரு பான் இந்திய நடிகர் தேவைப்பட்டார்’.
’படமும் சூப்பர் ஹிட், வசூலும் அமர்க்களம். ஆனால் ரஜினிக்கு ஏன் இத்தனை பான் இந்திய நடிகர்கள் ”வேட்டையன்”, “ஜெயிலர்”, “கூலி” என இந்த படங்களில் எக்கச்சக்க பான் இந்திய நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். இவ்வளவு மெனக்கெட்டு தான் ரஜினியை ஜெயிக்க வைக்க வேண்டியதாயிருக்கு. இவ்வளவு ரிஸ்க் எடுத்து தான் ரஜினியை ஜெயிக்க வைக்கணுமா?’ என்று ப்ளூ சட்டை மாறன் ரஜினியை கலாய்த்து பதிவிட்டுள்ளார்.