என்னை யாரும் Worship பண்ணாதீங்க!.. எஸ்.கே.வை மீம்ஸ் போட்டு பங்கம் பண்ணிய புளூசட்ட!...
நடிகர் சிவகார்த்திகேயனை கடந்த சில வருடங்களாகவே பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். விமர்சனம் என்றால் நக்கலடிப்பது, மீம்ஸ் போட்டு பங்கம் செய்வது என கலாய்த்து வருகிறார். இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக சொன்னபோது அவருக்கு ஆதரவாகவும், சிவகார்த்திகேயனுக்கு எதிராகவும் தொடர்ந்து டிவிட்டரில் கம்பு சுத்தி வந்தார் மாறன்.
மேலும், கோட் படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கி கொடுப்பது போல் காட்சி வந்ததால் எல்லோரும் சிவார்த்திகேயனை அடுத்த விஜய் என்று பேச தொடங்கினார்கள். அதை தன்னடக்கத்துடன் மறுத்தார் சிவகார்த்திகேயன். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு அடுத்த விஜய் ஆகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என தொடர்ந்து சொல்லி வருகிறார் புளூசட்ட மாறன்.
மேலும், சிவகார்த்திகேயனை திடீர் தளபதி என நக்கலடிக்க துவங்கினார் மாறன். இப்போது வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு விழாவில் ‘என்னை திடீர் தளபதி என நக்கலடிக்கிறார்கள் என சிவகார்த்திகேயயே கூறினார். யார் சொல்வதையும் நான் கண்டுகொள்ள போவதில்லை எனவும் பேசினார்.

இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் ‘என்னை கடவுளை போல பாவிக்கும் ரசிகர்கள் எனக்கு வேண்டாம்.. என்னை சகோதரனாக பார்க்கும் ரசிகர்களே எனக்கு வேண்டும். என்னை Worship பண்ண வேண்டாம்.. கடவுளையும், பெற்றோர்களையும் மட்டுமே Worship செய்ய வேண்டும்' என பேசினார்.திடீர் தளபதியின் கிரின்ஞ் அட்வைஸ் என இதை மீம்ஸ் போட்டு பங்கம் பண்ணியிருக்கிறார் புளூ சட்டை மாறன்.
