Connect with us
bluesatta

Cinema News

நீ ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் புளூசட்டமாறன்!..

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக வேலை செய்து வந்த சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல் என நடித்தார். ஆனால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

அதன்பின் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். இந்த படங்கள் சிவகார்த்திகேயனை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பல வருடங்களாக நடித்து வரும் நடிகர்களை விட இவர் அதிகம் பிரபலமானார். சம்பளமும் கோடி கோடியாக எகிறியது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் துரோகம் செஞ்சதா சொன்ன டி. இமான்.. இப்போ அடுத்து யாருடன் கைகோர்த்துள்ளார் தெரியுமா?..

மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் டி.இமான். சமீபத்தில் சிவகார்த்திகேயன் பற்றி அவர் கொடுத்த பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். இனிமேல் அவரின் படங்களில் நான் இசையமைக்க மாட்டேன். என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர் எனக்கு செய்த துரோகத்தை வெளியே சொல்ல முடியாது’ என பேசியிருந்தார்.

அதன்பின், இமானிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டதாகவும், அவர் பேசிய வீடியோவை நீக்க சொன்னதாகவும், அதற்கு இமான் மறுக்க இணைய கூலிப்படைகளை வைத்து இந்த விவகாரம் பற்றி பேசும் யுடியூப் வீடியோக்களை முடக்க முயற்சிகள் செய்துவருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், பிரபல யுடியூபர் புளூசட்டமாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இசைமான் பேட்டி வைரல் ஆனதால் பிரின்ஸ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது பொதுமக்களிடம் போய் சேர்ந்துவிட்டால் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ என்கிற இமேஜ் போய்விடும் என்பதால், சில கோடிவரை செலவு செய்து ஊடகங்களின் வாயை அடைத்து வருகிறார்.

இதையும் படிங்க: கமலுக்கு ஆப்பு வைத்த சிவகார்த்திகேயன்… மனுஷன் தலைல துண்டு போடாம பாத்துக்கோப்பா…

மேலும், தனது ஐடி குழு மூலம் ‘பிரின்ஸ் எவ்வளவு நல்லவர் தெரியுமா?.. அவர் ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாத சுத்த தங்கம் அவர் மேல் பழி போடுவது கடவுளுக்கே அடுக்காது’ என அவருக்கு நெருக்கமானவர்களையும், அல்லக்கைகளையும் வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்.

இசைமான் மட்டும் என்ன யோக்கியமா என ஆட்டையை கலைத்து பேட்டி கொடுத்து வருகிறார்கள் அந்த அல்லைக்கைகள். ஆனால், பிரின்ஸ் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எத்தனை கோடி கொடுத்தாலும் எல்லோரையும் உன்னால் விலைக்கு வாங்க முடியாது. நீ செய்த துரோகத்துக்கான பலனை அனுபவத்தே ஆக வேண்டும். ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது’ என பொங்கியுள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் ஆயுத பூஜை கொண்டாட்டம்!.. மனைவியை எங்கே காணோம் என ஆரம்பித்த நெட்டிசன்கள்!..

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top