×

பாலிவுட் நடிகை மாதிரி ஆயிட்டியேம்மா.. லாக்டவுனில் ஆளே மாறிப்போன பிக்பாஸ் ஜூலி  

பிக்பாஸ் ஜூலி ட்விட்டரில் அவர் என்ன கருத்து சொன்னாலும் நெட்டிசன்ஸ் கண்டம் செய்துவிடுவதால் அந்த பக்கம் தலையே காட்டுவதில்லை மாறாக இன்ஸ்டாகிராமில் நுழைந்து வித்அவுட் மேக்கப்பில் எக்கச்சக்க போட்டோக்களை அள்ளிவீசியுள்ளார். அது அத்தனைக்கும் நல்ல கமெண்ட்ஸ் மட்டும் வருகிறதென்றால் பாருங்களேன்.

 

இன்ஸ்டாவில் குடிமூழ்கி விட்டார். நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்     மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை.

இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார்.

இந்நிலையில் தற்போது  ட்விட்டரில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு பாலிவுட் நடிகை போல் அழகான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பீச்சில் ஜோராக இருக்கும் ஜூலியை பார்த்து அனைவரையும் பிரம்மித்து போய்விட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News