×

கொரோனாவால் இணைந்த ஹ்ருத்திக் ரோஷன் - சுஷானே ஜோடி....

கொரோனா வைரஸ் காரணமாக பிரிந்திருந்த பாலிவுட் தம்பதிகளான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சுஷானே ரோஷன் ஆகியோர் மீண்டும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளனர்.

 

உலகெங்கும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் விவாகரத்து பெற்ற பாலிவுட் ஜோடியான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் அவரது மனைவி சுஷானே ரோஷன் ஆகியோர் மீண்டும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளார்.

தன்க்கு திருமணமாகி இருந்த போது நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் நடிகை கங்கனா ரனாவத்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் ஹ்ருத்திக்கை அவரது மனைவி சுஷானே ரோஷன் விவாகரத்து தங்கள் இரு மகன்களோடு தனியாக சென்று வசிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் கங்கனாவுக்கும் ஹ்ருத்திக்குக்கும் இடையே பிரச்சனை எழுந்து பிரிந்த நிலையில் ஹ்ருத்திக் ரோஷன் தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக மகன்கள் தனிமையில் கஷ்டப்பட கூடாது என்பதற்காக தன் கணவரின் வீட்டுக்கு மகன்களோடு வந்துள்ளார் சுஷான்னே ரோஷன். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ஹ்ருத்திக் ரோஷன்.

From around the web

Trending Videos

Tamilnadu News