×

என்னது இன்னொரு லாக்டவுனா... பதறும் பாலிவுட்

மும்பையில் மீண்டும் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்ற தகவல் பாலிவுட் திரையிலகினரைப் பதற வைத்துள்ளது. 
 
 

மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையாக இருக்கலாம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மும்பை மாநகராட்சியும் மகாராஷ்டிரா அரசும் மக்களை எச்சரித்து வருகிறார்கள். 


ஆனால், பொது இடங்களில் மாஸ்க் இல்லாமல் மக்கள் சுற்றுவதை அதிகம் பார்க்க முடிகிறது. இதனால், மீண்டும் லாக்டவுன் விதிக்கப்படலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரேவும் மும்பை மாநகராட்சி கமிஷனர் கிஷோரி பட்னேகரும் வார்னிங் கொடுத்திருக்கிறார். 


கொரானாவிலிருந்து மெள்ள மீண்டுவரும் பாலிவுட் திரையுலகம் இதனால் மிரண்டுபோயிருக்கிறது. ஷூட்டிங், திரையரங்குகளுக்கு மக்கள் திரும்புவது என பாலிவுட்டின் பிஸினஸ் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலையை நோக்கி வந்துகொண்டிருக்கும்போது மக்கள் இப்படி அலட்சியமாக இருப்பது நல்லதல்ல என்கிறார்கள் பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகர்கள். விஜய் சேதுபதி நடித்த ஆரண்ய காண்டம் படத்தில் நடித்திருக்கும் பாலிவுட்டின் மூத்த நடிகர் ஜாக்கி ஷெராஃப் இதுகுறித்து கூறுகையில், ``என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. உங்கள் உயிர்மேல் உங்களுக்கு ஆசை இருந்தால் தயவு செய்து மாஸ்க் போடுங்கள். ஷூட்டிங் செட்களில் இருக்கும்போது எனது மாஸ்கை ரிமூவ் பண்ண ரசிகர்கள் கேட்டபோது கூட நான் மறுத்துவிட்டேன்’’ என்று சொல்லியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News