×

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வெடுக்குண்டு வைத்திருப்பதாக மர்மநபர் போலீசுக்கு தகவல்.

 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் இன்று காலை 10.30 மணியளவில் 108 அவசர எண்ணிற்கு அழைத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவரது வீடு முழுக்க சுமார் 1 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால் இது பொய்யான தகவல் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து போன் செய்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்த தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News