×

அடுத்தடுத்து தனுஷ் , விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் தனுஷ் மற்றும் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

விஜயகாந்த் வீட்டை தொடர்ந்து நடிகர்  தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மர்ம நபர் அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. விஜயகாந்த் வீட்டிற்கு  மிரட்டல் விடுத்த அதே நபர்தான் நடிகர் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.  தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பிரபல நடிகர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News