Categories: Cinema News latest news

வடிவேலு என் அப்பாவை பார்க்கவே இல்லை!.. கடவுளா பார்த்தோம்.. போண்டா மணி மகன் உருக்கம்!

வடிவேலுவை கடைசி வரை என் அப்பாவும் எங்க குடும்பமும் கடவுளா பார்த்தோம். ஆனால், கடைசி வரை அவர் வரவே இல்லை. ஒரு போன் போட்டுக் கூட விசாரிக்கவில்லை என போண்டா மணியின் மகன் சாய் உருக்கமாக அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

போண்டா மணி கடந்த ஒரு வருஷமாக இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில், மாற்று கிட்னி பொருத்துவதற்காக பலரிடம் பண உதவி கேட்டு வந்தார். ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை பலரும் ஆளுக்கு ஒரு லட்சம் உதவி செய்தனர்.

இதையும் படிங்க: அக்கா தம்பின்னு சொல்லிட்டு இப்படி அசிங்கம் பண்றீங்களே!.. பிக் பாஸ் போட்டியாளரை விளாசிய பிரபல நடிகை!

ஆனால், உதவி செய்கிறேன் என பத்திரிகையாளர்கள் கேட்ட போது மட்டும் பேட்டிக் கொடுத்த வடிவேலு ஒரு ரூபாய் கூட உதவி செய்யவில்லை என்றும் போண்டா மணியை நேரிலோ அல்லது போன் செய்தோ நலம் விசாரிக்கவில்லை. கடைசியாக அவர் உயிரிழந்த செய்தி கேட்டும் வடிவேலு கல் நெஞ்சத்துடன் வராமலே இருந்து விட்டார் என்றும் அவருடைய மகன் சாய் பேசி உள்ளார்.

வடிவேலுவுடன் துணை காமெடியனாக நடித்த முத்துக்காளை, பெஞ்சமின் உள்ளிட்ட பலர் போண்டா மணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். காமெடி நடிகர் வடிவேலுவை அவருடன் துணை நடிகர்களாக நடித்த பலரும் போண்டா மணியை போல கடவுளாகவே பார்த்து வந்த நிலையில், சினிமாவில் இருந்து தான் ஒதுங்கி விட்ட நிலையில், அத்தனை பேரையும் அவர் கழட்டி விட்டது ரொம்பவே தப்பு என பலரும் கண்டித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் இருந்தா மட்டும் பாருங்க!.. கையை தூக்கி அழகை காட்டும் தர்ஷா குப்தா…

போண்டா மணியின் குடும்பத்துக்காவது வடிவேலு ஏதாவது செய்ய வேண்டும் என ரசிகர்கள் எல்லாம் கோரிக்கை வைத்து வருகின்றனர். விஜயகாந்த் ஆக்டிவாக இருந்திருந்தால் தனது மகனை சினிமாவில் நடிகராக மாற்றியிருப்பார் என்றும் கடைசியாக போண்டா மணி அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

Saranya M
Published by
Saranya M