Categories: Cinema News latest news

உதவி கேட்ட போனி கபூர்… வழக்கம்போல் நோ சொன்ன அஜித்…. பாவம் அந்த மனுஷன்…!

அஜித் – வினோத் – போனி கபூர் ஆகிய மூவர் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் வலிமை. இப்படம் உருவாகி பல நாட்களாகியும் பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி சென்றே போனது. இந்த படம் வெளியாக தாமதமானதால் அஜித் தற்போது வரை வேறு படங்களில் நடிக்கவில்லை.

ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அஜித்தின் நேரடி போட்டியாளராக கருதப்படும் நடிகர் விஜய்யோ அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அஜித்தோ இன்னும் அதே இயக்குனருடன் கூட்டணி அமைத்து இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என ஆமை வேகத்தில் ஊர்ந்து வருகிறார்.

ajith-vinoth

சரி நாம் விஷயத்திற்கு வருவோம் வலிமை படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப்படம் குறித்த அறிவிப்பு வருவதும் போவதுமாக இருந்து வந்ததால் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஒரு சலிப்பு ஏற்பட்டு விட்டது.

வலிமை படம் வெளியானால் அஜித் ரசிகர்கள் நிச்சயம் படத்தை பார்க்க குவிவார்கள். ஆனால் அந்த வசூல் மட்டும் படக்குழுவினருக்கு போதாதே. படத்தின் பட்ஜெட் மட்டுமில்லாமல், இவ்வளவு நாள் வெளியிடாமல் வைத்திருக்கும் செலவையும் ஈடு செய்ய பெரிய வசூல் தேவை. அதற்கு மிக சிறப்பான விளம்பரம் தேவை.

அதனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தை வலிமை ரிலீஸ் குறித்து சில நொடிகள் பேசி புரோமோ வீடியோ ஒன்றை தயார் செய்து தருமாறு கோரியுள்ளார். ஆனால் அஜித் தனது வழக்கமான கொள்கை படி முடியவே முடியாது என கூறி விட்டாராம். மேலும், “பிடிச்சவங்க பார்க்கட்டும் பிடிக்கலைன்னா பார்க்க வேண்டாம்” என கூறியுள்ளார்.

இதனால் போனி என்ன செய்வதென தெரியாமல் இறுதியாக தனது மகள் ஜான்வி கபூரிடம் வலிமை படம் குறித்து விளம்பரம் செய்து இன்ஸ்டாகிரமில் வீடியோ வெளியிட கூறியுள்ளாராம். பாவம் அந்த மனுஷன் ஒரு படத்தை வெளியிட எவ்ளோ கஷ்டப்படுறாரு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்