×

என்ன ஆச்சு வலிமை… வரிசையாக பட அறிவிப்பை வெளியிடும் போனி கபூர் – கடுப்பில் தல ரசிகர்கள்!

தயாரிப்பாளர் போனி கபூர் இப்போது அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களை புதிதாக தயாரிக்க உள்ளார்.

 

தயாரிப்பாளர் போனி கபூர் இப்போது அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களை புதிதாக தயாரிக்க உள்ளார்.

அஜித் எப்போதுமே தன் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தன் படத்தின் மீதே முழுக் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பார். அதனால் வேறு படங்களை தயாரிப்பதைக் கூட விரும்ப மாட்டார். இந்நிலையில் இப்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரோ அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்கப்போவாதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஆர்ட்டிகிள் 15 ரீமேக் மற்றும் மஞ்சு வாரியர் நடித்த பிரதி பூவன்கோழி என்ற படத்தின் ரீமேக் என இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கும் மேலாக வலிமைப் படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில் அந்த படத்தை முடிக்காமல் அடுத்தடுத்த படங்களில் போனி கபூர் கவனம் செலுத்துவது அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News