×

பெண்ணாக பிறந்ததால் கள்ளிப்பால் கொடுத்து பெற்றோர் செய்த கொடூரம்!

மதுரை மாவட்டம் புள்ளநேரி என்ற கிராமத்தில், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி வீட்டின் அருகிலேயே உயிரிழந்த குழந்தையின் சடலத்தைப் புதைத்துள்ளனர். குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.

சோதனையில் அது பிறந்து 31 நாளே ஆன பெண் குழந்தையைக் கள்ளிப்பால் கொடுத்துப் பெற்றோரே கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து வைரமுருகன்-சௌமியா, வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி போலீசார் கைது செய்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News