என்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது – ரஜினி படப்பிடிப்பின்போது நடந்ததை உடைத்த போஸ் வெங்கட்!

தமிழ் சினிமாவின் எவர்கிரின் சூப்பர் ஸ்டார்  என்றால் அது ரஜினி மட்டுமே.  அவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவரது எளிமை குணம் மாறாமல்  இன்று வரை உள்ளார். தன்னை விட  சிறிய நடிகராகட்டும்
 
rajini- bose venkat

தமிழ் சினிமாவின் எவர்கிரின் சூப்பர் ஸ்டார்  என்றால் அது ரஜினி மட்டுமே.  அவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவரது எளிமை குணம் மாறாமல்  இன்று வரை உள்ளார். தன்னை விட  சிறிய நடிகராகட்டும் அல்லது ரசிகராகட்டும் அவர்களிடம் பழகும் விதமே தனிதான். அதேபோன்று தான் நடிக்கும் படமட்டுமல்லாமல் வேறு எந்த நடிகர் படமாக இருந்தாலும், படம் நன்றாக இருந்தால் உடனடியாக அழைத்து பாராட்டுவார்.  

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த மெகா ஹிட் திரைப்படம்  சிவாஜி. அந்த படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவத்தை நடிகர் போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 


அந்த பேட்டியில் போஸ் வெங்கட் கூறுகையில், நான் சினிமா துறையில் தீவிரமாக வாய்ப்பு தேடி அலைந்ததே  சிவாஜி  படத்திற்காகத்தான். என் முயற்சியினால்  அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த ஒரு நாள், பொது இடம் ஒன்றில் வைத்து காஸ்ட்யூமர் என்னிடம் வந்து, 'சார், அடுத்த சீனுக்கான உடையை  உடனே மாற்றிக் கொள்ளுங்கள்  என்று கூறினார்.

ஆனால், நான் சுற்றிலும் பார்த்தபோது உடை மாற்றிக் கொள்வதற்கோ அல்லது கேரவனோ, எந்த ஒரு மறைவான இடமும் அங்கு இல்லை. இதனால் சற்று தயங்கிய நான், அந்த காஸ்ட்யூமரிடம்,  என்ன சார் இப்படி பொது இடத்தில் வச்சு சொல்றீங்க... ஏதாவது மறைவான இடம் இருந்தா சொல்லுங்க, அங்க போய் மாத்திக்கிறேன் என்று கேட்டேன்."

bose venkat

அதற்கு அந்த காஸ்ட்யூமரோ, சார்,... அங்கே ஷாட் ரெடி பண்ணிட்டு இருக்காங்க, சீக்கிரம் உடையை மாத்துங்க சார் என்று கூறினார்.

காஸ்ட்யூமர் அவசரப்படுத்தியதால் நான் வேறு வழியின்றி லேசாக பின்னால் திரும்பிப் பார்த்தேன். அங்கே எனக்குப் பின்னால் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ரஜினி சார் தன் பேண்ட்டை கழற்றி மாற்றி, அடுத்த காட்சிக்கான உடையை அணிந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த அடுத்த கணமே எனக்குள் ஒரு நிமிடம் எல்லாமே ஸ்தம்பித்துவிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டார், பொது இடம் என்றும் பாராமல் தன் கடமையே முக்கியம் என உடை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால், இப்போதுதான் வளரத் தொடங்கும் நாம் மறைவிடம் கேட்கிறோமே என்று நினைத்தபோது, என்னை யாரோ செருப்பால் அடித்தது மாதிரி இருந்தது. ரஜினி சாரின் அந்த எளிமை எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்று போஸ் வெங்கட்  அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

From Around the web