Categories: Box Office latest news

5 நாள்களாகத் தள்ளாடும் தக் லைஃப்… கோட் படத்தின் முதல் நாள் வசூலைக்கூட இன்னும் தாண்டலையே..!

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்திற்கு படம் வெளியாவதற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. அதே நேரம் படம் வெளியான பிறகு சப்பென்று ஆகிவிட்டது. கமல், மணிரத்னம் எல்லாம் பெரிய பெரிய லெஜண்ட். பழம் தின்று கொட்டைப் போட்டவர்கள்னு கிராமப்புறங்களில் வேடிக்கையாகச் சொல்வார்கள்.

அப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். நாயகன் படத்தில் அப்படி ஒரு பிரமிப்பான வெற்றியைக் கொடுத்ததுதான் இதற்கு காரணம். அந்தக் காம்போ ஒரு படத்துக்குப் பிறகு இப்போதுதான் 2வது முறையாக இணைந்துள்ளது.

அது போதாது என சிம்புவை உள்ளே இறக்கி இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் என நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் கைதேர்ந்தவர்கள்தான். ஆனாலும் படத்திற்கு என்னாச்சு? கதை, திரைக்கதையில் சொதப்பல் என்கிறார்கள். கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

கமல், சிம்பு இருவரையும் அப்பா மகன் போல காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் திரிஷாவுக்காக அடித்துக் கொள்கின்றனர். இதைவிட வேறு என்ன கேவலம் இருக்க முடியும்? இந்தக் காரணத்திற்காகவே படத்திற்கு பல நெகடிவ் ரிவியூஸ், ட்ரோல்கள், மீம்ஸ்கள் என கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். படம் இத்தனை நாள்கள் தப்பித்ததே பெரிய விஷயம்.

இதில் கமல் கன்னடம் குறித்துப் பேசி சர்ச்சையாகி கர்நாடகாவிலும் திரையிட முடியாமல் போய் விட்டது. அந்த நஷ்டம் வேறு சேர்ந்து கொள்ள இப்போது பாக்ஸ் ஆபீஸில் தள்ளாட ஆரம்பித்துள்ளது. சேக்நில்க் ரிப்போர்ட்டின் படி, கோட் படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 43 கோடி. அதை தக் லைஃப் 5 நாள் வசூல் கூட முறியடிக்க முடியவில்லை.

தக் லைஃப் படத்தின் 5 நாள் இந்திய வசூல் விவரம் இதுதான். முதல் நாளில் 15.5கோடி, 2வது நாளில் 7.15கோடி, 3வது நாளில் 7.75கோடி, 4வது நாளில் 6.5கோடி, 5வது நாளில் 3.25கோடி. ஆக மொத்தம் 40.15கோடி.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v