Categories: Box Office latest news

டிராகன் படம் இவ்ளோ நாளா செஞ்ச வசூல்… இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?

தமிழ்சினிமா உலகில் இந்த ஆண்டில் 2 சின்ன பட்ஜெட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்தவகையில் 12 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த மதகஜராஜா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை சுந்தர்.சி. இயக்கி இருந்தார். விஷால், சந்தானம் நடிப்பு அருமையாக இருந்தது. சந்தானத்தின் காமெடி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

டிராகன் ஹிட்: யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தப் படம் ஹிட் அடித்ததும் பல சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக ஆரம்பித்தன. அந்த வகையில் டிராகன் படமும் வெளியானது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம். இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு நல்ல ஒரு மெசேஜ் இருந்ததாலும் திரைக்கதை அருமையாக இருந்ததாலும் படம் இன்று வரை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை படத்தின் வசூல் விவரம் எவ்வளவுன்னு பார்க்கலாமா…

வசூல் விவரம்: டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் 6.5கோடி, 2ம் நாள் வசூல் 10.8கோடி, 3ம் நாள் வசூல் 12.75 கோடி, 4வது நாள் வசூல் 5.8கோடி, 5வது நாள் வசூல் 5.1கோடி, 6வது நாள் வசூல் 5.2கோடி, 7வது நாள் வசூல் 4.15கோடி ஆக மொத்தம் ஒரு வார வசூல் 50.3கோடி. 8வது நாள் வசூல் 4.7கோடி, 9வது நாள் வசூல் 8.5கோடி, 10வது நாள் வசூல் 9 கோடி.

பாக்ஸ் ஆபீஸ் 100 கோடி: 11வது நாள் வசூல் 2.7கோடி, 12வது நாள் வசூல் 2.3கோடி, 13வது நாள் வசூல் 2கோடி என இதுவரை இந்தியாவில் மட்டும் 79.50கோடியை வசூலித்துள்ளது. கிட்டத்தட்ட 80 கோடியை நெருங்கியுள்ளது. படம் வெளியான 10வது நாளில் உலகளவில் 100 கோடியை எட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பை வெளியிட்டது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v