Connect with us

Box Office

game changer: கேம் சேஞ்சரின் 3ம் நாள் வசூல் கல்லாவை நிரப்பியதா? வாங்க பார்க்கலாம்…

;ஷங்கரின் இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் கேம் சேஞ்சர். இந்தியன் 2 படத்தில் மார்க்கெட் டல் அடித்த நிலையில் வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஷங்கர் இயக்கிய படம்.

பிரபலங்கள்: ராம்சரண், கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் படம் வெளியானதில் இருந்து கலெக்ஷனை அள்ளி வருகிறது. படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், சமுத்திரக்கனி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வில்லன்: படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக்கியமாக வில்லன் எஸ்.ஜே.சூர்யா அசத்தல் நடிப்பைக் கொடுத்துள்ளார். கலவையான விமர்சனங்கள் இருந்தபோதும் ஷங்கரின் வழக்கமான பிரம்மாண்டத்தைக் காண ரசிகர்கள் வந்தவண்ணம் உள்ளனர். தற்போது பொங்கல் தினத்தையொட்டி ரசிகர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கூடுதல் கட்டணம்: தெலுங்கானாவில் படத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது. அங்கு முதல் நாளில் 6 காட்சி திரையிடப்பட்டது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கூடுதல் கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கவும், சிங்கிள் தியேட்டர்களில் கூடுதலாக 100 வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து இந்தக் கூடுதல் கட்டணத்தை அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

90 கோடிக்கு பாடல்: 450 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஷங்கரின் வழக்கமான படத்தைப் போல இருந்தாலும் கிளைமாக்ஸ் அற்புதமாக உள்ளது என்கின்றனர். பாடல் காட்சிகளுக்கு மட்டும் 90 கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாம். தமனின் இசையில் ‘நா நா ஹைரானா’ பாடல் அருமை. படத்தில் ராம்சரணின் நடிப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உள்ளது என்பதே விமர்சகர்களின் கருத்து.

3 நாள் கலெக்ஷன்: இந்திய அளவில் கேம் சேஞ்சர் 3 நாள் கலெக்ஷன் என்னன்னு பார்க்கலாமா… முதல் நாளில் 51 கோடியும், 2வது நாளில் 21.6 கோடியும், 3வது நாளில் 17 கோடியும் பெற்றுள்ளது. ஆக மொத்தம் 89.6 கோடியை இதுவரை வசூலித்துள்ளது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Box Office

To Top