Connect with us

Box Office

ஒரு கோடியை கூட தொடாத கிங்ஸ்டன்!.. ஜி.வி பிரகாஷ் போட்ட காசு எல்லாம் போச்சா!…

இப்போது எல்லாம் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆனா பல படங்கள்வந்துவிடுகிறது. ஒரே வாரத்தில் சில படங்கள் ஒரே நாளில் கூட காணாமல் போய்விடுகிறது. கதையும், திரைக்கதையும் நல்லாருந்தா எந்தப் படமாக இருந்தாலும் சூப்பர்ஹிட் ஆகும். ஆனாலும் ஒரு சில படங்கள் தான் அப்படி வருகிறது. பெரும்பாலான படங்கள் பத்தோடு ஒண்ணு என்ற கணக்கில்தான் வந்து போகின்றன.

கிங்ஸ்டன்: அப்படித்தான் இந்த வார நிலைமையும். வாங்க. என்னென்ன படங்கள் எவ்வளவு வசூலைப் பெற்றது? அதுல ஜிவி.பிரகாஷின் கிங்ஸ்டன் தேறினாரா இல்லையான்னு பார்க்கலாம்.ஜிவி.பிரகாஷ்குமார் நடித்து இசை அமைத்த படம் கிங்ஸ்டன். கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். ஜிவி.பிரகாஷ்ராஜூக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இவர்களுடன் சேட்டன், நிதின் சத்யா, அழகம் பெருமாள், இளங்கோ குமாரவேல், சாபுமோன் அப்துஸ்சாமட், ஷாரா உள்பட பலர் நடித்துள்ளனர்.

திகில், அமானுஷ்யம், கடத்தல்: படத்தின் கதை திகில், அமானுஷ்யம், கடத்தல்னு வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறது. இது ரசிகர்களுக்கு கோர்வையாக சொல்லப்பட்டு இருந்தால் பெரிய அளவில் குழப்பமாக இருந்து இருக்காது என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஓவர் பில்டப்பில் படத்தை சின்னாபின்னமா ஆக்கிட்டாங்கன்னும் சொல்றாங்க.

கதை: ஆனால் மற்ற ஜிவி படங்களை ஒப்பிடும்போது இதுதான் பெஸ்ட் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்றவங்க திடீர் திடீர்னு இறந்துடுறாங்க. அதுக்கு என்ன காரணம்?

ஜிவி பிரகாஷூம் தன் நண்பர்களோடு அந்த இடத்துக்குப் போறார். தப்பிச்சாராங்கறதுதான் கதை. படம் ரசிகர்களைப் போய் பெரிய அளவில் ரீச்சாகியுள்ளதா என்பதை இப்போது முதல் நாள் வசூலே காட்டிக் கொடுத்துவிடும். அந்த வகையில் கிங்ஸ்டன் தேறினாரான்னு பார்க்கலாமா…

முதல் நாள் வசூல்: கிங்ஸ்டன் படம் முதல் நாளில் இந்திய அளவில் 90 லட்சத்தை வசூல் செய்து கிட்டத்தட்ட 1 கோடியை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளரே ஜிவி பிரகாஷ்தான். இதுவரை சம்பாதித்த பணத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ஆனால், அவர் போட்ட பணம் வருமா என்பது தெரியவில்லை.

நேற்று மட்டும் 6 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றின் வசூல் விவரங்களையும் பார்ப்போம். நிறம் மாறா உலகில் 5 லட்சமும், ஜென்டில் உமன் படம் 5 லட்சமும், லெக்பீஸ் 1 லட்சமும், எமகாதகி 3 லட்சமும், மர்மர் 12 லட்சமும் வசூலித்துள்ளது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Box Office

To Top