சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் தெலுங்கு படம் குபேரா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் கடந்த வாரம் வெளியானது. முதன்முறையாக தனுஷ் தெலுங்கில் நடிப்பதாலும் தெலுங்கு இயக்குனர் என்பதாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு. படத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார்.
படத்தில் பணக்காரனுக்கும், பிச்சைக்காரனுக்கும் இடையே நடக்கும் கதை. பிச்சைக்காரனாக வரும் தனுஷ் கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கிட்டு இருக்கிறார். உண்மையான குப்பையை எல்லாம் மேலே கொட்டி நடித்து அசத்தியுள்ளார்.
படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. அதே நேரம் தனுஷின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம் என்றும் சொல்கின்றனர். தனுஷ் படவிழாவின் போது மாமனார் ரஜினியைப் போல கோணலாக வாயை வைத்துக் கொண்டு பேசியது ட்ரோல் ஆனது. அவரைப் போலவே தத்துவ மழையாகப் பொழிந்தார்.
சிலர் மீடியாக்களில் படம் சரியாகப் போகாததற்குக் காரணம் அப்படிப் பேசுனதுதான் என்றும் சொல்கின்றனர். அளவுக்கு மீறிய பேச்சு ஒரு செங்கலைக்கூட உருவ முடியாதுன்னு சொன்னார். இப்போது அவரது செங்கலை உருவியவர் சேகர் கம்முலா தான் என்றும் சொல்கின்றனர். இன்னும் சிலர் இந்த விஷயத்தில் விஜய் உஷார். ஆனால் தனுஷ் இப்படி கோட்டை விட்டுவிட்டாரே என நெகடிவாகப் பேசினர். ஆனாலும் படத்தின் வசூலைப் பார்க்கும்போது நாளுக்கு நாள் முன்னேறி வருவது விமர்சனங்களை உடைத்துத் தூள் தூளாக்கியதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
sacnilkரிப்போர்ட்டின் படி குபேரா முதல் நாளில் 14.75 கோடியும், 2வது நாளில் 16.5கோடியும், 3வது நாளில் 17.25 கோடியும் என படிப்படியாக வசூலில் முன்னேறி வருகிறது. அந்த வகையில் 3 நாள்களில் இந்திய அளவில் செய்த மொத்த வசூல் 48.50 கோடி. கடந்த 2 நாள்கள் விடுமுறை. கூட்டம் இருக்கத்தான் செய்யும். இன்று திங்கள்கிழமையில் இருந்துதான் படம் தொடர்ந்து வசூலைக் குவிக்குமா அல்லது படிப்படியாக இறங்குமா என்று தெரியும்.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…