Categories: Box Office latest news

குடும்பஸ்தன் 5 நாளில் அள்ளிய கலெக்ஷனைப் பாருங்க… இத்தனை கோடியா?

சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல கதை அம்சத்துடன் வெளியாகி மக்களைக் கவரும்போது அது கணிசமான வசூலை ஈட்டுகிறது. அந்த வகையில் இப்போது வெளிவந்துள்ள குடும்பஸ்தன் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

குடும்பப்பாங்கான கதை: மணிகண்டன் நடிப்பில் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் பேம்லி மூவி குடும்பஸ்தன். எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வைசாக் இசை அமைத்துள்ளார். சான்வே மேக்னா, குருசோம சுந்தரம், ஆர்.சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் குடும்பப்பாங்கான கதை அம்சம் உள்ளது.

யதார்த்தம்: அத்துடன் நகைச்சுவையும் சேர்ந்து ரசிகர்களுக்கு எந்த வித ஹைப்பும் இல்லாமல் ஒரு யதார்த்தமான படத்தைக் கொடுத்துள்ளது. நவீன் என்ற கேரக்டரில் மணிகண்டன் யதார்த்தமாக வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம். படத்தின் முழு வெற்றியையும் தன் தோளில் ஏற்றிக் கொண்டு இயல்பாக அதே நேரம் அருமையாக நடித்துள்ளார்.

மணிகண்டன் படங்கள்: படத்தின் நாயகன் மணிகண்டன் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி ஆகிய படங்களுக்கு இவர்தான் வசனம் எழுதியுள்ளார். 2015ல் இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடிக்க ஆரம்பித்தவர், காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், காலா, விஸ்வாசம், தம்பி, சில்லு கருப்பட்டி, பாவ கதைகள், ஜெய் பீம், ஏலே, நெற்றிக்கண், சில நேரங்களில் சில மனிதர்கள், குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளம் எல்லாமே புதுசாகவும், ஜனரஞ்சகமாகவும் உள்ளது. அதனால் அவர் நடித்த படங்கள் என்றால் கேரண்டியுடன் பார்க்கச் செல்லலாம்.

5 நாள் வசூல்: அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள குடும்பஸ்தன் படத்தின் வசூல் கடந்த 5 நாள்களாக எத்தனை கோடியை அள்ளியுள்ளதுன்னு பார்க்கலாம். குடும்பஸ்தன் முதல் நாள் வசூல் 1 கோடி. 2ம் நாள் 2.2 கோடி. 3ம் நாள் 3.15கோடி. 4ம் நாள் 0.99கோடி. 5ம் நாள் 0.78 கோடி. மொத்த வசூல் 8.12 கோடி.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v