Categories: Box Office latest news

தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடி வசூலா?!.. விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Vidaamuyarhci: லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து நேற்று வெளியான திரைப்படம்தான் விடாமுயற்சி. அஜித்தின் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த படத்தை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

அட்வான்ஸ் புக்கிங்: எனவே, உலகமெங்கும் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே 25 கோடி வரை கல்லா கட்டியதாக சொல்லப்பட்டது. தமிழகத்தில் விஜய், அஜித் ஆகியோருக்கு ரசிகர்கள் அதிகம். முதல் 3 நாட்கள் அவர்களாலே படம் பல கோடிகள் வசூலித்துவிடும். இந்த படம் உருவான அதிகமான அப்டேட்டுகளை படக்குழு கொடுக்கவில்லை.

மகிழ் திருமேனி புரமோஷன்: ஷூட்டிங் நடக்கும்போது அஜித் ஓட்டும் ஜீப் கீழே கவிழ்ந்த வீடியோவை மட்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மேலும், ஹாலிவுட்டில் வெளியான Break Down படத்தின் ரீமேக் இது என்றும் சொன்னார்கள். ஆனால், படக்குழு இதுபற்றி வாய் திறக்கவில்லை. இப்படம் வெளியாகும் வரை நிறைய ஊடகங்களுக்கு மகிழ் திருமேனி பேட்டி கொடுத்தார்.

அப்போது திரைப்படம் பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். இது வழக்கமான அஜித் படம் இல்லை. மாஸ், பன்ச் வசனம், டிவிஸ்ட் போன்றவ இருக்காது. இது அஜித் சார் விரும்பி தேர்ந்தெடுத்த கதை. இதுவரை இப்படி ஒரு கதையில் எந்த நடிகரும் நடித்திருக்க மாட்டார் என ஹைப் ஏற்றினார்.

விடாமுயற்சி விமர்சனம்: நேற்று படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அஜித்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், அஜர்பைசானின் அழகான இடங்கள், படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் உள்ளிட்ட சில பாசிட்டிவ் இருப்பதாகவும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என் நெகட்டிவாகவும் கருத்துக்கள் வந்தது.

விடாமுயற்சி வசூல்: நேற்று உலகம் முழுவதும் இப்படம் 40 கோடி வரை வசூல் செய்ததாக இன்று காலை சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் 40 கோடி என இப்போது செய்திகள் பரவி வருகிறது. சில ஊடகங்கள் இந்தியாவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 22 கோடி மட்டுமே என பதிவு செய்திருக்கிறது. எனவே, இப்படத்தின் உண்மையான வசூல் என்ன என்பதை விரைவில் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா