Box Office
Vidamuyarchi: விடாமுயற்சி படத்தின் ஒருவார வசூல்… அட சொன்னதுதானே!
மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான அஜீத் நடித்த விடாமுயற்சி படத்துக்கு கலவையான விமர்சனங்களாக வருகின்றன. அந்தவகையில்,
கவர்ந்த படமாக அமையவில்லை: விடாமுயற்சி பற்றி உங்க கருத்து என்னன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். விடாமுயற்சி படம் எல்லா ரசிகர்களையும் கவர்ந்த படமாக அமையவில்லை என்று சொல்லலாம்.
அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும். அப்படி எல்லோரையும் கவர்ந்த ஒரு படமாக விடாமுயற்சி இருக்காதுன்னு நம்முடைய நேர்காணலிலே இயக்குனர் மகிழ்திருமேனி சொல்லி இருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
படம் பார்க்க வராதீங்க: மகிழ்திருமேனியைப் பொருத்தவரை அவர் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அடிக்கடி யூடியூப் சேனல்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது வழக்கமான அஜீத் படமாக இது இருக்காது. அந்தக் கண்ணோட்டத்தில் படம் பார்க்க வராதீங்கன்னு தெளிவாக சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருந்தால் பொது ரசிகர்கள் படம் பார்க்க எப்படி வருவார்கள்? அவர்கள் அஜீத் படங்களைப் பார்த்த மாதிரி திருப்தி இல்லை என்பதால் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. படத்தின் வசூலும் கணிசமாகக் குறைந்தது. எல்லாம் சொன்னதுதானே. இப்போது படத்தின் ஒரு வார வசூல் விவரத்தைப் பார்ப்போம்.
ஒரு வார வசூல்: முதல் நாளில் 26 கோடியும், 2வது நாளில் 10.25கோடியும், 3வது நாளில் 13.5கோடியும், 4வது நாளில் 12.5கோடியும், 5வது நாளில் 3.2கோடியும், 6வது நாளில் 3.35கோடியும், 7வது நாளில் 2.50கோடியும் வசூலித்துள்ளது. ஆக மொத்தம் 71.30கோடியை இந்திய அளவில் ஒரு வாரத்தில் வசூலித்துள்ளது விடாமுயற்சி.
படத்திற்கு நிறைய நெகடிவிட்டிகள் வந்தநிலையில் படத்தின் வசூல் மலேசியாவில் 3.7 மில்லியன் டாலர்கள் என்கிறார்கள். அஜீத், திரிஷா, ஆரவ், அர்ஜூன் நடித்த இந்தப் படம் இங்கு பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் மலேசியாவில் ரெக்கார்டு என்பது சந்தோஷம்தான்.