×

பெற்றோர் பேச்சைக் கேட்டு காதலன் திருமணம் … கடைசி வரை போராடிய மாணவியின் முடிவு!

பெற்றோரின் பிடிவாதத்தால் காதலன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் காதலி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

பெற்றோரின் பிடிவாதத்தால் காதலன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் காதலி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த சரவணன் என்ற ஓட்டுனருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான காயத்ரி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் சரவணனின் வீட்டாருக்கு தெரிந்த போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் காலம் தாழ்த்தினால் மகனின் காதல் இன்னும் தீவிரமாகும் என நினைத்த அவர்கள் சரவணனுக்கு வேறு ஒரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

அதற்காக பெண் பார்த்து திருமணத் தேதியும் நிச்சயித்துள்ளனர். இதையறிந்த மாணவி காயத்ரி திருமணத்தை நிறுத்த பல வழிகளில் முயன்றுள்ளார். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காததால் மனமுடைந்த அவர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News