×

காதலன் டார்ச்சர்!...பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

 

பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகை ஸ்வராணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு தொலைக்காட்சிகளில் வெளியான மனசு மமதா என்கிற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வராணி. மேலும், மவுனராகம் உள்ளிட்ட பல சீரியல்களிலும் அவர் நடித்து வந்தார். ஹைதராபாத் மதுரா நகரில் தாய், தந்தையுடன் வசித்து வந்த அவர் நேற்று இரவு தனது அறையில் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் அவரின் உடலை மீட்டு பிரதேபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் மரணம் தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அவரின் மரணத்திற்கு டிக்டாக்கில் பிரபலமான தேவராஜ் என்பவரே காரணம் என ஸ்வராணியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டிக்டாக்கில் இருவரும் பல காதல் வசனங்களுக்கு டிக்டாக் செய்துள்ளனர். எனவே, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால், கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனாலும், தேவராஜ் விடாமல் பிளாக்மெயில் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே போலீசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. 

செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி தேவராஜ் மிரட்டி வந்துள்ளார்.இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் ஸ்வராணி தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News