15 நாள் லீவ்!... 3 முக்கிய விஷயங்களை செய்யப்போகும் தனுஷ்!.. பரபர அப்டேட்!...

 
15 நாள் லீவ்!... 3 முக்கிய விஷயங்களை செய்யப்போகும் தனுஷ்!.. பரபர அப்டேட்!...

Actor Dhanush: தமிழ் சினிமாவில் இப்போது பரபரவென இயங்கி வரும் ஒரே நடிகர் தனுஷ்தான். ஒரு நாள் கூட இவர் ஓய்வெடுப்பதே இல்லை. தொடர்ந்து தான் நடிக்கும் அல்லது இயக்கும் படங்களின் வேலையை செய்துகொண்டே இருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தை முடித்த கையோடு திருப்பதிக்கு போய் மொட்டை போட்டுவிட்டு ராயன் படத்தை இயக்க துவங்கினார்.

சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷுடன் துஷரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதையை தனுஷ் இயக்கியிருந்த விதம் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் படமும் ஹிட் அடித்தது. அந்த படத்தை முடித்த கையோடு இட்லிக் கடை படத்தை துவங்கினார்.

15 நாள் லீவ்!... 3 முக்கிய விஷயங்களை செய்யப்போகும் தனுஷ்!.. பரபர அப்டேட்!...

தனுஷ் இயக்கி நடித்த இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டது. அந்த இடைவெளியில் தனது சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கப்போனார் தனுஷ். அந்த படத்தை இயக்கி கொண்டிருந்த போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்தும் வந்தார். கிடைத்த இடைவெளியில் இட்லி கடை படப்பிடிப்பு முடித்துவிட்டு குபேரா படத்திலும் நடித்து முடித்தார்.

சமீபத்தில் வெளியான குபேரா படம் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. தமிழில் இப்படம் ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.


குபேரா படத்தில் நடித்து வந்தபோது ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இப்போது அந்த படமும் இந்த மாத இறுதியோடு முடிவடையவுள்ளது. அடுத்து போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஜூலை 15ம் தேதி துவங்கவுள்ளது. எனவே, தனுஷுக்கு 15 நாட்கள் பிரேக் கிடைத்திருக்கிறது.

இந்த 15 நாட்களில் இட்லி கடை படத்தின் 2ம் பாதிக்கு பின்னணி இசை தொடர்பான வேலைகள், அஜித்தை சந்தித்து கதை சொல்வது, தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என திட்டம் போட்டு வைத்திருக்கிறாராம் தனுஷ்.

From Around the web