Connect with us

Cinema News

ஜனநாயகன் ஷூட்டிங் ஓவர்!.. ஃபுல் டைம் அரசியல்வாதியாக மாறும் விஜய்!..

Vijay TVK:தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய். 1992ம் வருடம் வெளியான நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர். 33 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கத்தில் இவருக்கு வெற்றிகள் அமையவில்லை என்றாலும் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது.

அதோடு அவருக்கு நிறைய ரசிகர்களும் உருவானார்கள், குஷி, கில்லி என நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறினார். ஒருகட்டத்தில் ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என்கிற நிலையும் உருவானது. கடந்த சில வருடங்களில் அவர் ரஜினியை ஓவர் டேக் செய்து மேலே போனார். ரஜினியை அதிக சம்பளம் வாங்கினார். ரஜினி படங்களை விட விஜயின் படங்கள் அதிக வசூல் செய்தது.

இந்த நேரத்தில்தான் அரசியலுக்கு போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். ஏனெனில், விஜயின் படங்கள் அதிக லாபம் கொடுக்கும் நிலையில் ‘அவர் போனால் அது போல இன்னொரு நடிகர வருவாரா?’ என்கிற கேள்வியும் பலருக்கும் எழுந்தது. கோட் படத்தில் நடிக்கும்போது அடுத்து நடிக்கும் படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் ஈடுபடப்போகிறேன் என விஜய் அறிவித்தார்.

கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயகத்தில் ஜனநாயகன் படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்து வந்தார்கள். இந்த படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே இடையிலேயே அரசியல் நடவடிக்கைகளிலும் விஜய் ஈடுபட்டு வந்தார். ஆளும் திமுகவை விமர்சித்து அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் கொடுப்பது என அரசியல் செய்து வந்தார்.

அதேநேரம், விஜயை பனையூர் அரசியல்வாதி என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். பனையூரை விட்டு அவர் வெளியே வருவதில்லை. மக்களை சந்திப்பில்லை. 2026 தேர்தலில் போட்டியிட்டு நேரிடையாக முதல்வராக வேண்டும் என விஜய் ஆசைப்படுகிறார் என விமர்சித்தார்கள்.

இந்நிலையில், நேற்றோடு ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்து விஜய்க்கு Send of பார்ட்டி கொடுத்து அனுப்பிவிட்டார்கள். எனவே, இன்று முதல் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறப்போகிறாராம், தேர்தலுக்கு பின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கும் திட்டமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இனி ஒரு புதிய விஜயை அவரின் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்கிறார்கள் தவெகவினர்.

Continue Reading

More in Cinema News

To Top