Connect with us

Cinema News

நீங்க வரலாற்று ஆய்வாளரா?!.. என்ன ஆதாரம்?!.. கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் கேள்வி!..

Thug life kamal: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள தக் லைப் பட புரமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் கலந்துகொண்டார். அவரை பற்றி பேசிய கமல் ‘தமிழில் இருந்து உருவான மொழிதான் கன்னடம்’ என பேசினார். இதற்கு கர்நாடகாவில் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுபோன்ற பிரச்சனைகளை ஊதி பெருசாக்கும் சில கன்னட அமைப்புகள் ‘கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லை படம் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்’ என கொந்தளித்தார்கள். ஆனால், கமலோ ‘நான் சொன்னது அன்பின் வெளிப்பாடுத்தான். மன்னிப்பு கேட்க முடியாது. மொழி வல்லுனர்கள் என்ன சொன்னார்களோ அதைத்தான் நான் சொன்னேன்’ என கமல் கூறியிருந்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் கமலுக்கு ஆதரவாக பேசியிருந்தார். கமல் மன்னிப்பு கேட்காத நிலையில் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகாது என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்குமாறு கமலின் ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். கமல் என்ன வரலாற்று ஆய்வாளரா இல்லை மொழியியல் வல்லுனரா? என அவர் கேட்டார்.

மேலும், தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது என்பதற்கு என்ன ஆதாரம்?. 300 கோடி செலவில் படமெடுத்திருப்பதாக சொல்லும் நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது?.. நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். கமல் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு மற்றும் அமைதியின்மை ஏற்பட்டிருக்கிறது கமல்ஹாசனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மக்களின் உணர்வை புண்படுத்தக்கூடாது. நானே படம் பார்க்க என நினைத்தேன். இந்த பிரச்சனையால் பார்க்க முடியாது’ என நீதிபதி ராம பிரசன்னா கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 2.30க்கு வெளியாகவுள்ளது.

Continue Reading

More in Cinema News

To Top