Connect with us

Cinema News

விஜய் பிறந்தநாளைக்கு இது வேண்டாம்!. ஸ்டிரிக்ட்டா சொன்ன ரஜினி!. இவரையா அடிக்குறீங்க!…

கடந்த சில வருடங்களாகவே ரஜினி – விஜய் போட்டி என்கிற நிலையை விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் உருவாக்கிவிட்டார்கள். விஜய் சின்ன பையனாக இருக்கும் போது ரஜினி பெரிய ஹீரோ. சொல்லப்போனால் ரஜினி படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய். தனது நண்பர்கள் வட்டாரத்தில் ரஜினியை ‘தலைவர்’ என்றே சொல்வார்.

நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கியபோது ‘நீ தலைவரை ஒரு படம் இயக்கு’ என சொன்னவர் விஜய்தான். அதேபோல், லோகேஷ் கனகராஜிடம் விஜய் சொன்னார். நெல்சன் ஜெயிலர் படம் எடுத்ததற்கும், லோகேஷ் கூலி படத்தை இயக்கியதற்கும் பின்னணியில் இருந்தவர் விஜய். ஆனால், ரசிகர்களோ இது புரியாமல் சண்டை போட்டு வருகிறார்கள்.

விஜயை எப்போது அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் சொல்ல ஆரம்பித்தார்களோ அப்போது விஜய் – அஜித் ரசிகர்கள் போட்டி என்பது போய் விஜய் – ரஜினி ரசிகர்கள் சண்டை துவங்கிவிட்டது. ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன கழுகு – காக்கா கதையில் விஜய்தான் காக்கா என அவரின் ரசிகர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஏனெனில் கடந்த சில வருடங்கள் விஜயின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கினார். ரஜினி படங்களை விட விஜயின் படங்கள் அதிக வசூலையும் பெற்றது. எனவே, ரஜினிக்கு விஜயின் மீது பொறாமை என விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள். எனவே, அவர்கள் அவர்கள் ரஜினியை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

ரஜினியின் வேட்டையன் படம் வந்தபோது முதல் காட்சி முடிவதற்கு முன்பே படம் ஃபிளாப் என சொல்லி டிவிட்டரில் டிரெண்ங் செய்து படத்தை காலி செய்தார்கள். நான் விஜயை சொல்லவில்லை என ரஜினி சொல்லியும் அவர்களின் கோபம் அடங்கவே இல்லை. எப்படியும் கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்கள் வரும்போது இதே வேலையை விஜய் ரசிகர்கள் செய்வார்கள்.

இந்நிலையில், விஜய்க்காக ரஜினி விட்டு கொடுத்த ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை ஜூன் 21ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், விஜய்க்கு 22ம் தேதி பிறந்த நாள் என்பதால் வேண்டாம் என சொல்லிவிட்டாராம் ரஜினி. அதனால்தான் 25ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை அனிருத்தும், டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

Continue Reading

More in Cinema News

To Top