கண்ணீர் விட்டு கலங்கிய ரவி மோகன்.. விட்டுச் சென்ற கெனிஷா.. காரணம் ஆர்த்தி ரவியா?

 
கண்ணீர் விட்டு கலங்கிய ரவி மோகன்.. விட்டுச் சென்ற கெனிஷா.. காரணம் ஆர்த்தி ரவியா?

தமிழ் திரையுலகில் நடிகர் ரவி மோகன், அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி மற்றும் பின்னணி பாடகி கெனிஷா தொடர்பான விவகாரம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆர்த்தியுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு ரவி மோகன், கெனிஷாவுடன் நெருக்கமாக பழகி வந்ததாக பல்வேறு தகவல்கள் வெளியானது. பல சர்ச்சைகளுக்கு இடையே கெனிஷா அவரை முழுமையான சுதந்திரத்துடன் அனுப்பிவைக்கிறேன். இனி அவருக்காக போராடப்போவதில்லை. இனிமேல் சமூக வலைதளங்களிலிருந்தும், இசை மற்றும் தெரபி பணிகளிலிருந்தும் சில காலம் விலகுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஆர்த்தி ரவியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு தாய் சிங்கத்தின் அமைதியை பலவீனமாக நினைக்கக்கூடாது. என் குழந்தைகளையும், என் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்தால் உண்மையுடன் போராடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு கெனிஷாவின் வீடியோவுக்கு பதிலடியாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதனிடையே ரவி மோகனின் பத்திரிகையாளர்களை சந்தித்து கண்ணீர் மல்க பேசியது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், “எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன். என் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களிலிருந்து முழுமையாக வெளியேறும் வரை என் படங்களும் திரையரங்குகளில் வெளியாகாது” என்று தெரிவித்துள்ளார். தன்னை விட்டு கெனிஷா சென்று விட்டார் என்றும் அவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து கொடுக்கும் வரை புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் நடித்த படங்களும் வெ்ளியாகாது என்று ரவி மோகன் பேசியுள்ளது திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web