×

மூச்சுத்திணறல்… மாணவன் சொன்னதை புரிந்து கொள்ளாத 108 சேவை – கடைசியில் நடந்த விபரீதம் !

காஞ்சிபுரம் அருகே மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட மாணவன் சொன்னதை புரிந்துகொள்ளாத மாணவன் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

 

காஞ்சிபுரம் அருகே மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட மாணவன் சொன்னதை புரிந்துகொள்ளாத மாணவன் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கணேஷ் குமார். இவர் கடந்த 9 ஆம் தேதி பச்சையப்பன் பள்ளி மைதானத்தில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளார். எதிர் முனையில் பேசியவரால் இவர் பேசியதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு உதவி செய்ய உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த மாணவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அதிர்ச்சியளிக்க அவரது செல்போனில் அவர் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்ததை பார்த்துள்ளனர். எனவே 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்பவர்களின் லொகேஷனை அறிந்து கொள்ளும் வகையில் சில வசதிகளைக் கொண்டுவர வேண்டும் என அவரது குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News