மிகப்பெரிய சீக்ரெட்டை உடைத்த பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் வெப்சீரிஸ்! என்ன நடந்துச்சு தெரியுமா?

ஜியோ ஹாட்ஸ்டாரில் தற்போது புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஸ்பெஷல் வெப்சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது. 
 
brothers and sisters

Brothers And Sisters: ஜியோ ஹாட்ஸ்டாரில் புதன்கிழமையில் ஒளிபரப்பாகி வரும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் வெப்சீரிஸில் இந்த வாரம் நடந்து இருக்கும் சுவாரஸ்ய தொகுப்புகள். 

எஸ்எஸ்ஸுக்கு இரண்டாவது ஒரு வாழ்க்கை இருக்கு என்பதை ஜக்கு கண்டுபிடித்து விடுகிறார். அதனுடன் இல்லாமல் தன்னுடைய அக்கா தங்கைகளிடம் சொல்ல எல்லாருக்குமே அதிர்ச்சியாகி விடுகின்றனர். அவர் அப்பாவா தானா என்ற சந்தேகம் எழுகிறது. 

இதில் கடுப்பாகும் ஜக்கு உடனே அந்த பங்ஷனில் போட்டோ எடுத்த போட்டோகிராபரை பார்த்து அப்பா போட்டோவை எடுத்து கொண்டு வந்து அவர்களிடம் காட்ட எல்லாருமே அதிர்ச்சியாகி விடுகின்றனர். அதே நேரத்தில் ஜெய்ஸ்ரீக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடக்கிறது. 

அவரை பார்க்க வந்த மாப்பிள்ளை ஜெய்ஸ்ரீயின் பழைய காதல் கதை தெரிந்தவராக இருக்கிறார். அதிலும் அந்த விஷயத்தை அப்பட்டமாக வெளியில் எல்லாரிடமும் போட்டு உடைத்து விட எல்லாருமே ஷாக்காகி விடுகின்றனர். 

பொன்மலர் கோபத்தில் கேள்வி கேட்டு விட்டு மயங்கியும் விழுந்து விடுகிறார். இதனால் அவரை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்து செக்கப் நடக்க அவருக்கு வந்தது நெஞ்சு வலி என்பதை தெரிந்து குடும்பமே அதிர்ச்சியில் இருக்கின்றனர். 

இதை தொடர்ந்து பெண்கள் என்ன முடிவெடுப்பார்கள். அப்பாவின் ரகசியத்தை உடைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அடுத்தடுத்த வாரம் பரபரப்பாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web