Categories: Cinema News latest news throwback stories

எம்.ஜி.ஆரிடம் வெறும் 25 பைசா கேட்ட நடிகை!.. எதற்காக தெரியுமா?!….

நடிகர் எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு கழுத்தில் குண்டடிபட்ட விஷயம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்காக பல இடங்களில் பிரார்த்தனை செய்தனர். எம்.ஜி.ஆரும் சிகிச்சையில் மீண்டும் நலமுடன் வீடு திரும்பினார். வீட்டில் அவர் ஓய்வில் இறந்த நேரம் அது.

அப்போது எம்.ஜி.ஆருடன் ‘ஜெனோவா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை பி.எஸ்.சரோஜா எம்.ஜி.ஆரை தொலைப்பேசியில் அழைத்துள்ளார். எம்.ஜி.ஆர் போனை எடுத்தவுடன் அவரை விசாரித்துவிட்டு ‘ஒரு நாலணா (25 பைசா) மட்டும் எனக்கு கொடுங்க’ என்றாராம்.

ஒரு நிமிடம் அதிர்ச்சியான எம்.ஜி.ஆர் ‘கேக்குறதுதான் கேக்குற அதிகமாக கேட்க வேண்டியதுதான. எதுக்கு நாலணா கேட்குற?!’ என்றாராம். அதற்கு சரோஜா ‘நீங்க மருத்துவமனையில் இருந்த போது சீக்கிரம் குணமடைய வேண்டும் என அந்தோனியர் தேவாலயத்திற்கு நான் வேண்டி கொண்டேன். அதற்காகத்தான் கேட்டேன்.. நீங்கள் உங்கள் கையால் கொடுத்து அனுப்புங்கள். மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் அண்ணா’ என சொன்னாராம்.

எம்.ஜி.ஆரும் அவர் கூறியது போலவே நாலணாவை கொடுத்து அனுப்பினாராம். அதாவது எம்.ஜி.ஆர் கொடுத்த நாலணாவை எடுத்துக்கொண்டு ஒரு கார் பி.எஸ்.சரோஜாவின் வீட்டிற்கு சென்றது.

பி.எஸ்.சரோஜா எம்.ஜி.ஆரை அண்ணனாகவே பாவித்த ஒரு நடிகை. எம்.ஜி.ஆரை ‘சேட்டா சேட்டா’ என அன்போடு அழைப்பார். எம்.ஜி.ஆரும் அவரை சகோதரியாக கருதி ‘தங்கச்சி’ என பாசமாக அழைப்பாராம். 1941ம் வருடம் முதல் 1978 வரை தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பி.எஸ்.சரோஜா நடித்துள்ளார்.

Published by
சிவா