×

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பி டி ஓ…. அதிர்ச்சியில் மரணம் !

கரூர் மாவட்டத்தில் வீட்டுமனையை வரைமுறைப்படுத்த லஞ்சம் பெற்ற பிடிஓ லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாரிடம் சிக்கிக் கொண்டதால் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார்.

 

கரூர் மாவட்டத்தில் வீட்டுமனையை வரைமுறைப்படுத்த லஞ்சம் பெற்ற பிடிஓ லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாரிடம் சிக்கிக் கொண்டதால் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார்.

கரூர் மாவட்டம், .பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கன்னிவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ். இவர் தனது வீட்டுமனையை வரைமுறைப்படுத்துவதற்காக க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியை நாடியுள்ளார். ஆனால் அவர் அந்த பணியை செய்து முடிப்பதற்கு 34000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான ரமேஷ் இது சம்மந்தமாக, ரமேஷ், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம், இதுபற்றி புகார் அளித்துள்ளார். பின்னர் அவர்கள் கூறிய யோசனையின் படி ஜெயந்திராணியிடம் லஞ்சம் கொடுப்பது போல கொடுத்துள்ளார். அப்போது அங்கே மாறுவேடத்தில் இருந்த போலீஸார் ஜெயந்திராணியை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார். இந்த சம்பவமானது அரசு ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News