Varanasi: மாடு மட்டும்தான் பொம்மையா? மகேஷ்பாபுவை பங்கம் செய்த ப்ளூசட்டை மாறன்
ராகமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி படத்தின் டீஸர் மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. படத்தில் ருத்ரா என்ற கேரக்டரில் மகேஷ்பாபு நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக மகேஷ்பாபு காளையுடன் மேடைக்கு வரவழைக்கப்பட்டார். தகவல் தொழில் நுட்பத்தால் செய்யப்பட்ட அந்த காளையில் மகேஷ் பாபு அமர்ந்து மேடைக்கு வந்தார்.
இதன் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு ஒரு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கூடவே ப்ரித்விராஜ் மெயின் வில்லனாக நடிக்கிறார். ராஜமௌலி படம் என்றால் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாகுபாலி படத்திற்கு பிறகு இந்தப் படமும் ஒரு மைல் கல்லை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதன் முதற்கட்டமாக டீஸர் வெளியீட்டு விழாவையே பிரம்மாண்டமாக நடத்திவிட்டார்கள். இந்த நிலையில் பிரபல திரைவிமர்சகர் ப்ளூசட்டை மாறன் மகேஷ்பாபுவின் புகைப்படத்தை பதிவிட்டு ட்ரோல் செய்து வருகிறார். அதாவது இந்தப் படத்தில் மாடும் மகேஷ்பாபுவும் பொம்மை என்று நினைத்தவர்கள் மட்டும் கையை தூக்குங்கள் என்று பதிவிட்டு வருகிறார்.
அதற்கு நிறைய பேர் ‘ஆமாம் நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்’ என்று பதிவிட்டு வருகின்றனர். மகேஷ்பாபுவை பொறுத்தவரைக்கும் எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் ஒரெ ரியாக்ஷனில்தான் இருப்பார். பொன்னியின் செல்வன் விழாவில் கூட விக்ரம் ஒரு விஷயத்தை பகிர்ந்திருப்பார். அதாவது அவர்கள் புரோமோஷனுக்காக ஃபிளைட்டில் செல்லும் போது ஜெயம் ரவி விக்ரமிடம் கேட்டாராம்.

இந்த நடிகர் மட்டும் கத்தியால் குத்தினாலும் சரி, கேர்ள்-க்கு லவ் புரோபோஸ் பண்ணும் போதும் சரி ஒரே ரியாக்ஷனில் இருக்காரே என்று கேட்டாராம். ஆனால் ஜெயம் ரவி சொன்ன நடிகரின் பெயரை குறிப்பிடாமல்தான் விக்ரம் இதை அந்த விழாவில் பேசியிருந்தார். ஜெயம் ரவி சொன்ன நடிகர் மகேஷ்பாபு என பலருக்கும் தெரிந்துவிட்டது.அப்படித்தான் நேற்று நடந்த வாரணாசி டீஸர் விழாவில் அந்த பொம்மை காளையுடன் அவர் ஏறி அமர்ந்து வரும் போது எந்தவொரு ரியாக்ஷனும் கொடுக்காமல் அசல் பொம்மை போல்தான் இருந்தார்
