×

பேருந்து கண்ணாடிய உடைத்த சிக்ஸர்! துபாயை தெறிக்க ஹிட்மேன்!

ஐபிஎல் போட்டிகளுக்காக நடக்கும் பயிற்சியில் ரோஹித் ஷர்மா அடித்த சிக்சர் மைதானத்துக்கு வெளியே சென்றுள்ளது.

 

ஐபிஎல் போட்டிகளுக்காக நடக்கும் பயிற்சியில் ரோஹித் ஷர்மா அடித்த சிக்சர் மைதானத்துக்கு வெளியே சென்றுள்ளது.

ஐபிஎல் 2020 தொடருக்காக துபாயில் முகாமிட்டுள்ளன 8 அணிக வீரர்களும். இப்போது பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.  முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அடித்த பந்து ஒன்று மைதானத்துக்கு வெளியே சென்று அங்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளது.  இந்த சிக்சரின் தூரம் 95 மீட்டர் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகளவில் சிக்ஸ் அடிக்கும் திறமை பெற்றவர் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா என்பது அனைவரும் அறிந்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News