×

கொரோனா பரவும் அபாயம் – கோயம்பேட்டில் பேருந்து இயக்கம் நிறுத்தம் !

ஊரடங்கு முடிவு அறுவுறுத்தப்பட்டதை அடுத்து கோயம்பேட்டில் மக்கள் குவிந்ததை அடுத்து பேருந்து இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

ஊரடங்கு முடிவு அறுவுறுத்தப்பட்டதை அடுத்து கோயம்பேட்டில் மக்கள் குவிந்ததை அடுத்து பேருந்து இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதையடுத்து இன்று மாலை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நேற்று தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமானது.

இதனால் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகமாகும் என்றும் மேலும் கிராமங்களுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து இன்று மதியம் முதல் கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

From around the web

Trending Videos

Tamilnadu News