×

வேலை வாங்கித் தா கடவுளே…. உன்னிடமே வந்துவிடுகிறேன் – மூடநம்பிக்கையால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை கிடைத்த நபர் தண்டவாளத்தில் தலைவைத்து உயிரைப் போக்கிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை கிடைத்த நபர் தண்டவாளத்தில் தலைவைத்து உயிரைப் போக்கிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே எள்ளுவிளை சேர்ந்த இளைஞர் நவீன். இவருக்கு 32 வயதாகியும் தான் கற்ற கல்விக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் கோயில் கோயிலாக சுற்றியுள்ளார். அப்போது தனக்கு மட்டும் வேலைக் கிடைத்துவிட்டால் உன்னிடமே வந்துவிடுவேன் என கடவுளிடம் வேண்டிக் கொண்டுள்ளார்.

இதையடுத்து வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் உதவி மேலாளராக சேர்ந்துள்ளார். பின்னர் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். தனது நேர்த்திக் கடன் பற்றி கடிதம் எழுதி வைத்த அவர் புத்தேரியில் ரயில்வே பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

From around the web

Trending Videos

Tamilnadu News