×

கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துங்க.. காந்தி ஜெயந்தி நாளில் தமிழக முதல்வரின் அதிரடி அறிக்கை.!!

காந்தி ஜெயந்தி நாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துமாறு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

காந்தி ஜெயந்தி நாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துமாறு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே இலட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி வகுக்கிறதுஎன்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி, அன்னாரின் பிறந்தநாளான இந்நன்னாளில், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள நூற்போர் மற்றும் நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 கதரங்கடிகளின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவிகிதம்தள்ளுபடி வழங்கி வருகிறது.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கதர் நெசவாளர்களின் மேம்பாட்டிற்காக, கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக கதர் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்களில் பணிபுரியும் நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, விபத்து / இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.கதர், எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, ஏழை எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டுமென நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

From around the web

Trending Videos

Tamilnadu News