Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அசிங்கப்படுத்திய விகடன்..கதறும் திரௌபதி இயக்குனர்… சமூகவலைத்தளங்களில் சலசலப்பு…

திரௌபதி திரைப்படத்தை கடுமையாக விமர்சித்ததோடு, மிகவும் குறைவான மதிப்பெண்ணை பிரபல வார இதழ் விகடன் அளித்திருப்பது அப்பட இயக்குனர் மோகனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ddf8453c243d00e35a557792c9f0d45a-1

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் திரௌபதி. இப்படம் கடந்த வாரம் வெளியானது. ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதால் அப்பிரிவின் ஆதரவும், மற்றவர்கள் இப்படத்தை கடுமையாகவும் எதிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக, குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பெண்களை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் காதல் என்கிற பெயரில் ஏமாற்றி வாழ்க்கையை பாழ் செய்வதுவிடுகின்றனர் என்கிற கரு இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. எனவே, சில சமூகத்தை சேர்ந்த பிரிவினர் இப்படத்தை ஆதரித்தும், சிலர் அதை எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனந்த விகடன் வார இதழ் திரௌபதி படத்திற்கு வெறும் 29 மதிப்பெண் மட்டுமே அளித்துள்ளது. திரைத்துறையை பொறுத்தவரை விகடன் எத்தனை மதிப்பெண் கொடுக்கிறது என்பது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதிக மதிப்பெண்கள் கொடுத்தால் அதையே விளம்பரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால், 29 மதிப்பெண் மட்டுமே அளித்து படத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விகடன் மட்டுமல்ல.. பல இடங்களில் முகமுடி கொண்ட மனிதர்கள் தான்.. இவர்களை இடது கையால் ஓரம்கட்டி விட்டு வலது கையால் அடுத்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுத போறேன்.. புட்டிபால் பசங்க..’ என விமர்சித்துள்ளார்.

மேலும், இது என் படத்திற்கான மார்க் இல்லை.. என் சமூகத்தில் இருந்து நான் வெற்றியாளராக வெளிவந்ததை தாங்க முடியாத வலி.. இது ஆரம்பம் தான்.. பல வன்னிய படைப்பாளிகள் இனி வெல்ல தான் போகிறார்கள்.. இப்படியே குப்புற படுத்து புலம்ப வேண்டியது தான் நீங்க.. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி’ என காட்டமாக டிவிட் செய்துள்ளார்.

அதேநேரம், இதற்கு முன் வந்த நல்ல படங்களை பாராட்ட விகடன் தயங்கியதில்லை. நீங்கள் நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top