×

கேக் ரூ.1500, பெட்ரோல் ரூ.500 ரூ.டெக்ரேஷன் 2000 - சூரி பிள்ளைகளின் அட்ராசிட்டி!

சூரி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிள்ளைகள்..

 

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான சூரி தனது யதார்த்தமான நடிப்பினால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தார். தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே தள்ளிவிட்டார்.

நடிப்பது மட்டுமின்றி புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கி பிசினஸ் செய்து வருகிறார். படங்களில் காமெடியனாக நடித்தாலும் நிஜத்தில் இயலாதோருக்கு வேண்டிய உதவிகளை செய்து மக்களின் மனதில் நிஜ ஹீரோவாக இடம்பிடித்துள்ளார் சூரி. கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்தவர்களில் சூரியும் ஒருவர்

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சூரிக்கு அவரது பிள்ளைகள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு "400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News