×

வாய்ப்பு தருவதாக என் வீட்டுக்கு வந்தார்… ஆனால் படுக்கை அறையில் – நடிகைக்கு நடந்த மோசமான அனுபவம்!

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான பிபாஷா பாசு தனக்கு நடந்த மோசமான பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

 

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான பிபாஷா பாசு தனக்கு நடந்த மோசமான பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

சச்சின் படத்தில் கவர்ச்சி நாயகியாக அறிமுகமான பிபாஷா பாசு பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான அவர் சமீபத்தில் கூட தனது கணவருடன் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் டேஞ்சரஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். அதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தனக்கு நடந்த  மீ டு சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதில் ‘நான் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலங்களில் ஒரு தயாரிப்பாளரின் நம்பரில் இருந்து எனக்கு மெஸேஜ் வந்தது. அதனால் அவரை நம்பி என் வீட்டு முகவரியைக் கொடுத்தேன். என் வீட்டுக்கு வந்த அவர் வீட்டை சுற்றி பார்த்தார். அப்போது படுக்கை அறைக்கு சென்றார். நானும் பின்னாடி செல்ல என்னை படுக்கையில் தள்ளி என் மேல் ஏறி அமர்ந்து துன்புறுத்தினார். நான் கத்தி கூச்சல் போட்டதால் என்னைவிட்டு சென்றார்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News