×

கோலி இளம் வீரரிடம் இப்படி நடந்துகொள்ளலாமா? கொந்தளித்த நெட்டிசன்ஸ்!

ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யக்குமார் யாதவ்வை முறைத்துப் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யக்குமார் யாதவ்வை முறைத்துப் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் பெங்களூர் அணியின் பவுலர்களுக்கு தண்ணீர் காட்டினார். அவரது விக்கெட்டை எடுக்க முடியாத கோபத்தில் கோலி அவரைக் கிட்ட சென்று முறைத்து ஸ்லெட்ஜ் செய்தார். ஆனால் சளைக்காத சூர்யகுமாரும் பதிலுக்கு அவரை பார்த்து முறைத்தார். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கோலி இதுபோல இந்திய அணிக்கு தேர்வாகவுள்ள ஒரு இளம் வீரரிடம் நடந்து கொள்ளலாமா எனக் கோலிக்கு எதிராய் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதே போல மற்றொரு தருணத்தில் பாண்ட்யாவும் மோரிஸூம் காரசாரமாக பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web

Trending Videos

Tamilnadu News